தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரிழந்த கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு புஷ்பாஞ்சலி: சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை! - இந்து மக்கள் கட்சி

பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

டிஐஜி விஜயகுமாருக்கு புஷ்பாஞ்சலி
டிஐஜி விஜயகுமாருக்கு புஷ்பாஞ்சலி

By

Published : Jul 13, 2023, 9:17 AM IST

டிஐஜி விஜயகுமாருக்கு புஷ்பாஞ்சலி

தஞ்சாவூர்:மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு சிவசேனா, இந்து மக்கள் கட்சி, அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் இணைந்து புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நேற்று (ஜூலை 12) சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சி, மற்றும் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், விஜயகுமார் ஆன்மா அமைதி பெற வேண்டி 2 நிமிடம் மவுனம் காத்து நின்று, உதிரி மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதையும் படிங்க:Neomax: ராமநாதபுரத்தில் 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி: இருவரை கைது செய்த போலீசார்!

இதில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் டி குருமூர்த்தி, அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இராமநாதன், ஒன்றியச் செயலாளர் சோழபுரம் அறிவழகன், பாஜக தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் என பல்வேறு அரசியல் கட்சியினரும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் அனைவரும், இந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டறிய இவ்வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார். இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், டிஐஜியாக கடந்த ஜனவரி 6ஆம் தேதி கோவை சரக காவல் துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 7ஆம் தேதி கோவை சரக டிஐஜியாக பணிபுரிந்து வந்தவர் திடீரென தனது முகாம் அலுவலகத்தில் வைத்து தற்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இவர் கடந்த 6 மாதங்களாக மன அழுத்ததில் இருந்தாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்ததின் காரணத்தை ஆராய வேண்டும் என பல தரப்பினர் கூறிய வன்னம் இருக்கின்றனர். அதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட இவரது மரணத்திற்கான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

இதையும் படிங்க:டிஐஜி விஜயகுமார் வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details