'கோ 4 குரு' என்ற அமைப்பு நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டி - மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் இடையே நடைபெற்றது. நான்கு நாடுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 72 மாநிலங்களைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நாசாவுக்கு செல்லும் தஞ்சை மாணவி! - பிரிலியண்ட் சிபிஎஸ்ஸி பள்ளி
தஞ்சை: அகில இந்திய அளவிலான அறிவியல் கட்டுரைப் போட்டியில் தேர்வாகியுள்ள புதுக்கோட்டை உள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவி நாசாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
இதில் புதுக்கோட்டைஉள்ளூர் அருகே உள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 174 பேர் கலந்துகொண்டு 109 மாணவர்கள் 80 மதிப்பெண்ணும் மூன்று மாணவர்கள் 80-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றனர்.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவி ஸ்ரீமதி அறிவியல் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவி ஸ்ரீமதியை கோ 4 குரு அமைப்பு சார்பில் எந்தவித கட்டணமின்றி இலவசமாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது என அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொணட அந்த அமைப்பின் நிறுவனர் ராமலிங்கம் அறிவித்துள்ளார். இதையடுத்து அந்தப் பள்ளி மாணவி ஸ்ரீமதியை பிரிலியண்ட் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் பாராட்டினர்.