தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை திருட்டு..! - தங்க நகைகள்

கும்பகோணம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பிரமுகர் வீட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைத் திருட்டு..!
அதிமுக பிரமுகர் வீட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைத் திருட்டு..!

By

Published : Nov 22, 2022, 12:36 PM IST

Updated : Nov 22, 2022, 12:55 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகம், தேப்பெருமாநல்லூர் சிவன்கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் கோவி.அன்பழகன். அதிமுக பிரமுகரான இவர், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் சன்னதியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார்.

இவர் தனது வீட்டை இரவு பூட்டிவிட்டு தங்கும் விடுதிக்கு சென்று அங்கு தங்கி விட்டு பிறகு, காலை வீடு திரும்பிய போது, வீட்டின் வாசல் கேட் பூட்டு உடைக்கப்பட்டும், பின்புறம் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு திடுக்கிட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து கோவி.அன்பழகன் திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வங்கிக்கு கொண்டு சென்ற ரூ. 1 கோடி கொள்ளை

Last Updated : Nov 22, 2022, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details