தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு நிலத்தில் மரங்கள் கடத்தல் - அதிமுக கவுன்சிலர் புகார்; திமுக கவுன்சிலர் மறுப்பு - அதிமுக கவுன்சிலர் புகார்

தஞ்சாவூர் அருகே அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக அதிமுக கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். அதற்கு திமுக கவுன்சிலர் மறுப்புத்தெரிவித்துள்ளார்.

Tanjore  tanjore news  tanjore latest news  aiadmk councilor  councilor  aiadmk  aiadmk councilor complaint  smuggling  government land  tree smuggling from government land  aiadmk councilor complaint on tree smuggling  மரம் கடத்தல்  கடத்தல்  கவுன்சிலர்  அதிமுக  அரசு நிலத்தில் மரம் கடத்தல்  அதிமுக கவுன்சிலர் புகார்  தஞ்சாவூர்
மரம் கடத்தல்

By

Published : Nov 24, 2022, 12:42 PM IST

தஞ்சாவூர்: வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை வெட்டி, திமுக கவுன்சிலர் அன்பழகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனுமதி இன்றி, கடத்திச்சென்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

கடத்தப்பட்ட மரங்களில் பாதி மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனை பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் முருகானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சியில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனு

இதற்கு மறுப்புத்தெரிவித்து திமுக கவுன்சிலர் அன்பழகன், “தனது வார்டு இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இடம் சுத்தப்படுத்தப்பட்டது. என் மீது தவறு ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.

வெட்டப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர், மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக கவுன்சிலர் புகார்.. திமுக கவுன்சிலர் மறுப்பு..

இதையும் படிங்க: இருளர் பெண்கள் பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details