தஞ்சாவூர்:அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாராளுமன்ற தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் சிறப்பான பணியில் ஈடுபடும்.
அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறமும், ஓபிஎஸ் ஒருபுறமும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரை தான் அதிமுக கட்சி தலைவராக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தற்போது இது செயல்படாத இயக்கமாக உள்ளது.
நான்கு மாதத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தல் வைக்காததால், ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் என்று சொல்வது தவறு. வாய்ப்பு கிடைக்கும் போது பன்னீர்செல்வத்தை சந்திப்பேன்” என கூறினார்.