தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று வந்தது போன்று அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் பழனிசாமியும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், ஆளுநரை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.