தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கருப்பட்டி சேரியில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கான நகைக்கடன் வட்டி உயராது. தற்போது உள்ள நிலையே தொடரும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
'அதிமுக வென்றால் அடிப்படை வசதிகள் விரைந்து செய்து முடிக்கப்படும்...!'
தஞ்சாவூர்: உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்றால் மீதமுள்ள அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து முடிக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
agriculture-minister-duraikannu-canvasing-in-kumbakonam
திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் 75 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் மீதமுள்ள அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துகொடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: டாஸ்மாக், மதுக்கூடங்களை மூட சேலம் ஆட்சியர் உத்தரவு