தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த இரகுநாதபுரம் பகுதியிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு 299 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "எக்காரணத்தைக் கொண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படமாட்டாது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். அதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும்" என்று கூறினார்.