பாபநாசத்திலிருந்து 30 பயணிகளை புள்ளப்பூதங்குடிக்கு ஏற்றிச்சென்ற மினிபஸ் எதிர்பாராத விதமாக உமையாள் புரம் கிராமம் அருகே சாலையோரம் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த நான்கு பயணிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மினிபஸ் கவிழ்ந்து காயமடைந்தவர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் ஆறுதல்! - agri minister consoled the mini bus accident people
தஞ்சாவூர்: உமையாள் புரம் அருகே மினிபஸ் கவிழ்ந்ததில் காயமடைந்த பயணிகளை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
![மினிபஸ் கவிழ்ந்து காயமடைந்தவர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் ஆறுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4947475-891-4947475-1572776176208.jpg)
agri minister consoled the mini bus accident people
சிகிச்சை பெற்று வரும் நான்கு பயணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிகழ்வின் போது கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சுஜித் பெற்றோர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல்!