தஞ்சையில் ஆனைக்கொம்பன் பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.
பூச்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள்: வேளாண் உற்பத்தி ஆனணையர் ஆய்வு
தஞ்சை: இன்று நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் கூறியுள்ளார்.
agri director
இதன்பின் செய்தியாளரகளைச் சந்தித்த அவர் கூறுகையில், பயிர் செய்யப்பட்டு 50 நாட்களுக்குள் இந்த ஆணை கொம்பன் பூச்சி பாதிப்பு ஏற்படுகிறது. வேளாண்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் ஆலோசித்து அதற்குரிய மருந்துகளை தெளித்து தங்களுடைய பயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தங்களுடைய இழப்பீடுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்றார்.