தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்ட அதிமுக முன்னாள் எம்பி: இதுதான் காரணமா? - DMK leader MK Stalin

ஸ்டாலினைச் சந்திக்க திமுக மாவட்டச் செயலாளரிடம் அதிமுக முன்னாள் எம்பி நேரம் கேட்டுள்ளார்.

ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட அதிமுக முன்னாள் எம்பி
ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட அதிமுக முன்னாள் எம்பி

By

Published : Jul 29, 2021, 9:27 PM IST

தஞ்சாவூர்: முன்னாள் எம்பி பரசுராமன் அதிமுக தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக உள்ளார். இவர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார்.

2014ஆம் ஆண்டு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில், வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி, பரசுராமன் வென்றார். வைத்திலிங்கத்தின் பினாமி எனக் கூறும் அளவிற்குச் செல்வாக்கு மிக்க நபராக மாறினார்.

காலப்போக்கில் இருவருக்கும் நெருக்கம் குறைந்தது. இந்நிலையில், பரசுராமன் கடந்த சில நாள்களுக்கு முன்பு, முதலமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்த காணொலி ஒன்று வெளியானது.

இந்நிலையில், திமுக மாவட்ட அலுவலகத்திற்கு தனது ஆதரவாளருடன் வந்த பரசுராமன் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான சந்திரசேரன், முன்னாள் எம்எல்ஏ ராமசந்திரன் ஆகியோரைச் சந்தித்து திமுகவில் இணைவதற்காக, ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

அப்போது, ஸ்டாலினிடம் கேட்டுவிட்டு பதில் அளிப்பதாகக் கூறி பரசுராமனை சந்திரசேகரன் அனுப்பிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details