கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் தேரடி வீதியில் உள்ள திரையரங்கம் ஒன்று, ஊரடங்கு விதியை மீறி செயல்படுவதாக கூறப்பட்டது.
ஊரடங்கு விதிமீறல் : தியேட்டருக்கு சீல் வைத்த ஆட்சியர்! - சினிமா தியேட்டருக்கு சீல் வைப்பு
திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திரையரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார்.
ஆட்சியர்
இதற்கிடையில், தடுப்பூசி முகாமை ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திரையரங்கிலிருந்து, படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதாகத் திரையரங்க உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் , நகராட்சி அலுவலர்கள் மூலம் தியேட்டருக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.