கரோனா பெருந்தொற்று கால கட்டத்தில், ரத்த வங்கிகளில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பூதலூர் ஒன்றிய தலைமை, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 56 பேர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி அரசு தலைமை மருத்துவர் டி.தவல்மதி, ஆலோசகர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். தானம் செய்யப்பட்ட ரத்த யூனிட்டுகளை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் எம்.ஜெயந்தி, ஆலோசகர் கண்ணன், செவிலியர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.