தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
அமமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி -நடிகர் ரஞ்சித் - Election campaigan
தஞ்சை: தேர்தலில் அமமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என பட்டுக்கோட்டையில் நடிகர் ரஞ்சித் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிவித்தார்.
இந்நிலையில், தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பட்டுக்கோட்டையில் நேற்றிரவு (ஏப்ரல் 9) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், 'கஜா புயலின்போது ஆளும் கட்சி செய்யாததை, தினகரன் செய்தார் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள். திமுக இத்தனை ஆண்டுகள் ஆண்டபோதும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. நடக்கும் தேர்தலில் அமமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும். துரோகக்கூட்டம் இரட்டை இலையை அடகுவைத்துவிட்டனர். எனவே, இரட்டை இலையை மறந்துவிட்டு பரிசுப் பெட்டகத்தை நினைவில் வையுங்கள்' என அவர் கூறினார்.