தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகளை இரண்டு மணிநேரம் மூடி போராட்டத்தை நடத்தினர். அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உடன்பாடு ஏற்படாததால் இன்று பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்:
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
- பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மேலும் வேலை நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடுமாவட்டத்தில் உள்ள சம்பத் நகர் டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது ஊழியர் சுரேஷ் என்பவர் திடீரென தனது உடல் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தீக்குளிக்க முயன்ற சுரேஷை கைது செய்தனர்.