தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளை மீறி பஜ்ஜி வியாபாரம்: ஆவின் பாலகத்திற்குச் சீல்! - ஆவினில் பஜ்ஜி வியாபாரம்

தஞ்சாவூர்: கரோனா தொற்று விதிமுறைகளை மீறிய ஆவின் பாலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆவின் பாலகம்
aavin milk

By

Published : May 26, 2021, 10:20 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், மேலஉளூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த என்.ராஜகுமாரி, சாந்த பிள்ளைகேட் அருகே ஆவின் பாலகம் நடத்தி வந்தார். இங்கு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் விதிகளுக்கு முரணாக, பாலகத்தில் வடை, பஜ்ஜி, முறுக்கு உள்ளிட்டவை விற்பதாகவும், கரோனா விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாகப் பாலகத்தை நடத்தி வந்ததாகவும், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒப்பந்த விதிகளை மீறி பாலகம் நடத்தி வந்த முகவர் ராஜகுமாரிக்கு வழங்கப்பட்ட ஆவின் பாலகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கடையை மூடி அலுவலர்கள் சீல் வைத்தனர். இந்நிகழ்வின் போது பொது மேலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:'மோடி பதவியேற்ற தினத்தை தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்' - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details