தஞ்சாவூர்: கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள மிகப் பழமையான பேருந்து நிலையத்தை அதி நவீன பேருந்து நிலையமாக மாற்றி அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பணிகள் தொடங்கிய நிலையில், இன்று (செப் 28) பயணிகளின் உபயோகத்திற்காக தற்காலிக போருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக அரசால் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இப்புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக அதே சாலையில் 100 மீட்டர் தொலைவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்விளக்கு, குடிநீர், கழிவறை மற்றும் நிழற்குடை வசதியுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் தொகுதி எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் தலைமையிலும், பேரூராட்சி மன்றத் தலைவர் ம க ஸ்டாலின் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தை மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் மற்றும் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதையும் படிங்க:"இன்னைக்கு ஒரு புடி" - ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா! மழை வேண்டி விடிய விடிய நடந்த கறி விருந்து!