தஞ்சாவூர்:கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (22). இவர் தனது பெற்றோரிடம் புதிதாக பைக் வாங்கித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் பைக் வாங்கித் தருவதில் தாமதமானதால், குளிர்பானத்தில் எலியை கொல்ல பயன்படுத்தும் பேஸ்ட்டை கலந்த நந்தகுமார், அதனை குடிக்கும் போது செல்பி வீடியோவாக பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதனை பார்த்த பிறகு விரைந்துச் சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த நந்தகுமாரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.