தஞ்சாவூர்:கும்பகோணம் மாதுளம்பேட்டை சீதளா மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கையன் என்பவரது மகள் செந்தாமரை (40), இவர் வெளிநாடுகளில் கார் ஓட்டுநராக பணியாற்றி அதில் வந்த வருமானத்தை, கும்பகோணத்தில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எந்தவித ஆவணமும் இல்லாமல் கொடுத்துள்ளார். பின்னர் இந்தியா திரும்பியதும் அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். செந்தாமரை வெளிநாட்டில் இருக்கும் போது கொடுத்த பணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் திரும்பி கேட்டபோது, அவர்கள் அதனை வழங்காமல் இருந்துள்ளனர்.
பண மோசடி செய்தவர்கள் மீது புகார்:உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது செந்தாமரை கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த செந்தாமரை நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜன.4) நீதிமன்றம் செல்ல முயன்ற செந்தாமரையை தடுத்ததாக பெண் உதவி ஆய்வாளர் சுமதி மற்றும் தலைமை காவலர் சரோஜினி ஆகியோர் உட்பட சில காவலர்களையும் திட்டி தாக்கியுள்ளார். இவர் செய்த ரகளையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.