தஞ்சை: கும்பகோணம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை சுமார் 100 கோடி ரூபாயை வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; மேலும் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் சிபிஎம் கட்சி எம்எல்ஏ சின்னதுரை உள்ளிட்ட ஏராளமான கரும்பு விவசாயிகள் கரும்பு தோகைகளுடன் கண்டன முழக்கங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.