தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு; நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு

தஞ்சை பெருவுடையார் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

By

Published : Dec 21, 2022, 10:11 PM IST

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர்: பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் வீற்றிருக்கும் மகாநந்தியம் பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோயில்களை கண்காணிக்கப் பறக்கும் படை - அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details