தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சண்டையை விலக்க சென்றவருக்கு அரிவாள் வெட்டு! - Kumbakonam news

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மாங்குடி வளையபேட்டை பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க சென்றவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் உயிரிழந்தார்.

சண்டையை விலக்கச் சென்றவருக்கு அரிவாள் வெட்டு!
சண்டையை விலக்கச் சென்றவருக்கு அரிவாள் வெட்டு!

By

Published : May 20, 2020, 3:00 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாங்குடி வளையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்( 42). இவர் உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் வசிக்கக்கூடிய வீட்டின் அருகே குடித்துவிட்டு இருதரப்பினர் அரிவாளால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட பன்னீரும் அவரது உறவினர்களும் சண்டையைத் தடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பன்னீரின் கழுத்து, கால் பகுதியிலும் அரிவாள் வெட்டு ஏற்பட்டது. அதேபோல் இவரது உறவினர்கள் மூன்று பேருக்கும் கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல் துறையினர் வெட்டுக் காயம் ஏற்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த பன்னீர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மற்ற மூவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் மது பிரச்னையால் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:போதையின் உச்சத்தில் தந்தை; வண்டியிலிருந்து விழுந்த குழந்தை

ABOUT THE AUTHOR

...view details