தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தைச் சேர்ந்த நபர் குவைத்தில் உயிரிழப்பு; உடலைக் கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை! - Thanjavur News

Tamil Nadu electrician dies in Kuwait: தமிழகத்தைச் சேர்ந்த நபர் குவைத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால், அவரது உடலை விரைந்து தாயகத்திற்கு கொண்டுவரும்படி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குவைத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு
குவைத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 7:12 PM IST

Updated : Sep 24, 2023, 9:02 PM IST

குவைத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கத்தின் மகன் முருகேசன் (48). இவருக்கு சத்யா என்ற மனைவியும், 17 மற்றும் 12 வயதில் என இரு மகன்களும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. முருகேசன் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் (Kuwait) எலக்ட்ரீசியனாக (Electrician) பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு (2022) சிறுநீரகக் கல் காரணமாக சிகிச்சை பெற தாயகம் வந்த இவர், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் குவைத் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை (செப். 23) 5 மணியளவில் மனைவி சத்யாவிடம் அலைபேசியில் முருகேசன் பேசி உள்ளார். பின்னர், இரவு 8 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அங்கிருந்து அலைபேசி வாயிலாக தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சத்யா மற்றும் குடும்பத்தினர் துக்கம் தாளாமல் அழுது புலம்பி வருகின்றனர். மேலும், முருகேசனின் உடலை விரைந்து தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் மனைவி சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:திருமணமான இரண்டே ஆண்டில் இளம் பெண் உயிரிழப்பு; சந்தேக மரணமாக வழக்கு பதிவு!

Last Updated : Sep 24, 2023, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details