தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுகே உள்ள குறிச்சி கிராம பகுதியில் சாலையோரம் கிடக்கும் பழைய பேப்பர் பாட்டில்களை பொறுக்கி அதை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் ஏழைப் பெண்கள் உள்ளனர். அதில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இருவர் சாலையோரம் பழைய பாட்டில்களை எடுத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சாமிநாதன் என்பவர் ஒரு பெண்ணை காலணியால் அடித்துள்ளார். அந்த சம்பவத்தை அருகில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் சாமிநாதன் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சாமிநாதன் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளரின் கணவர் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சாமிநாதனிடம் வாட்டாத்தி கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.