கும்பகோணம்தாலுகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவி தனது வீட்டின் பின்புறம் குளித்துக்கொண்டிருக்கும்போது மறைந்து இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்ததுடன், அதனை காண்பித்து, மாணவியை பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.
ஆனால், மாணவி வீடியோ எடுத்த நபரின் ஆசைக்கு இணங்காத நிலையில், ஆத்திரமுற்ற அவர் அந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் வீடியோ எடுத்த நபரின் தந்தையிடம் முறையிட்டபோது, அவரின் தந்தை மிகவும் திமிராக, 'என் மகன் அப்படித்தான் செய்வான்' என்றதுடன், வந்தவர்களை அவமதித்து, தகாத வார்த்தைகளால் திட்டி திருப்பி அனுப்பியுள்ளார்.