தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

தஞ்சாவூரில் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

By

Published : Jul 16, 2021, 11:18 AM IST

தஞ்சாவூர்: மாரியம்மன் கோயில் வெள்ளாளசெட்டித் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் தனியார் பேட்டரி கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை தலைவராகவும் உள்ளார். இவருடைய மகள் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

இந்நிலையில், வேல்முருகன், தனது மகளின் 15 வயது பள்ளி தோழிக்கு, தனது மகள் பேசுவதுபோல வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற வேல்முருகன், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். ஆனால், மாணவியின் பாட்டி வீட்டிற்கு வந்தவுடன், வேல்முருகன் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது:

இந்நிலையில், கடந்த வாரம் மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வேல்முருகன் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கிருந்தவாறு தொடர்ந்து மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை கடத்திய இளைஞர் மீது பாய்ந்த போக்சோ

ABOUT THE AUTHOR

...view details