தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் அருகிலுள்ள மயானத்தில் இளைஞரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், தலை மட்டும் எரியாமல், உடல் பகுதி முழுவதும் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அவரது அருகில் பை ஒன்றும் கிடைத்துள்ளது. காவல் துறையினர் அந்தச் சடலத்தைக் கைப்பற்றி, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதே சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கழிச்சி அம்மன் குளக்கரை பகுதியில் வசித்துவரும் காளியம்மாள் தனது மகன் கண்ணனைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.