தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் ஆய்வு செய்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அவர் கரோனா தடுப்பு பணிக்காக 21 புதிய மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 94% பேர் பூரண குணமடைந்துள்ளனர் - தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சை: கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 94% பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தகவல் வெளியிட்டுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில்
94% விதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் பாதிப்பு என்பது குறைந்து வருகிறது. பாதிப்பு உள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களில் கூடுதலாக பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக புதிதாக 21 மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்" என்றார்.