கரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு அங்கேயே அனைத்து மதுபாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன.
ரூ. 90 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தனி அறையில் சீல்! - 90 lakhs worth liquor
தஞ்சாவூர்: அரசு மதுபானக் கடையில் இருந்த ரூ. 90 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில், திருக்காட்டுப்பள்ளி, விண்ணமங்கலம், திருவையாறு, தோகூர், அல்சகுடி ஆகிய ஐந்து அரசு மதுபானக் கடைகளிலும் இருந்த ரூ. 90 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அழகர்சாமி, காவல் ஆய்வாளர் கென்னடி ஆகியோர் முன்னிலையில் தனி அறையில் வைத்து அதற்கு சீல் வைக்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி