தேர்தல் பறக்கும்படை குழுவினர் வேளாண்மை அலுவலர் சிவகாமி தலைமையில் உதவி ஆய்வாளர் அப்பர், காவலர்கள் பிரபாகரன், கௌதமன் ஆகியோர் இன்று காலை திருவையாறு அருகே வைரவன்கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த திருச்சி மண்ணச்சநல்லூருக்கு சென்ற மினி வேனை மறித்து ஆய்வு செய்தனர். அப்போது, மண்ணச்சநல்லூர் பிரமங்கலம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஜெயபால் (32) என்பவர் 87 ஆயிரத்து 50 பணம் வைத்திருந்தார்.