தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பள்ளியக்ரஹாரம் - கும்பகோணம் பிரிவு சாலை அருகேவுள்ள வயலில் சிலர் களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வயல்வெளி அருகிலிருந்த பம்புசெட்டில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் திடீரென பறந்து அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை கடித்துள்ளது.
இதில் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி(80), அதே ஊர் சின்ன தெருவைச் சேர்ந்த ஞானசேகரன்(58), மணல்மேடு பகுதியைச் சார்ந்த பிரவீன்குமார்(23), வசந்தா (45) உள்பட 8 பேரை கதண்டு கடித்தது. இதனையடுத்து கதண்டு கடித்த எட்டு பேரையும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.