தமிழ்நாட்டிலுள்ள பழமையான கோயில்களிலிருந்து திருடப்பட்ட ஏராளமான உலோகம் மற்றும் கற்சிலைகள் புதுச்சேரி ரோமன் ரோலண்டு தெருவைச் சேர்ந்த ஜீன்பால் ராஜரத்தினம் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் அலுவலர்கள் 60 உலோகச் சிலைகள், 14 கற்சிலைகளை கைப்பற்றினர்.
புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
தஞ்சாவூர்: தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட 60 உலோகச்சிலைகள் உள்ளிட்ட 74 சிலைகள் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இவை, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 25) ஒப்படைக்கப்பட்டன. சிலைகளின் உயரம், எடை ஆகியவற்றை நீதிபதிகள் முன்னிலையில், ஊழியர்கள் ஆய்வுசெய்த பின்பு 60 உலோகச் சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கவும் மீதமுள்ள 14 கற்சிலைகளை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதி க.விஜயகுமார் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவர் கைது