தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டுப் பொங்கல் விழா: 700 பசுக்களுக்கு கோ பூஜை - undefined

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டுவரும் 700க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு இன்று கோ பூஜை செய்யப்பட்டது.

மாட்டுப் பொங்கல் விழா
மாட்டுப் பொங்கல் விழா

By

Published : Jan 16, 2020, 5:50 PM IST

மாட்டுப் பொங்கலையொட்டி கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வரும் 700க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு இன்று கோ பூஜை செய்யப்பட்டது. கோவிந்தபுரம் விட்டல் சமஸ்தானம் என்ற கிருஷ்ணன் கோயில் பகுதியில் நடைபெற்ற இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கிருஷ்ணர் மேய்த்த பசு வகைகள் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உயர் ரக பசுக்கள் இந்த கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இன்று மாட்டுப் பொங்கலையொட்டி இந்த கோசாலையில் உள்ள 700க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோ பூஜை செய்யப்பட்டது.

மாட்டுப் பொங்கல் விழா: 700 பசுக்களுக்கு கோ பூஜை

இதில் பசுக்களுக்கு வஸ்திரம் அணிவித்து மலர் தூவி பக்தர்கள் வழிபட்டனர். சிலர் இந்த கோசாலைக்கு பசுக்களை தானமாக வழங்கி சர்க்கரை பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். காலை முதல் நடைபெற்று வரும் இந்த கோ பூஜையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்களும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details