தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவையாறு தாலுகாவின் 6 பாதுகாப்பு மையங்களில் 321 பேர் தங்கவைப்பு - Thanjavur district news

தஞ்சாவூர்: திருவையாறு தாலுகாவின் ஆறு பாதுகாப்பு மையங்களில் 321 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருவையாறு தாலுக்காவில் 6 பாதுகாப்பு மையம்
திருவையாறு தாலுக்காவில் 6 பாதுகாப்பு மையம்

By

Published : Nov 26, 2020, 7:59 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பழனம் ஊராட்சியில் மூன்று பாதுகாப்பு மையங்களும், வெள்ளாம்பெரம்பூர், செம்மங்குடி, அள்ளுர் ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டன. இதில் 321 பேர் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கேயே உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கையை வட்டாடட்சியர் நெடுஞ்செழியன் தலைமையிலான வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

நிவர் புயலால் கல்யாணபுரம் முதல் சேத்தி ஊராட்சியில் காளியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கணேசன் மகன் சரவணன் என்பவர் கூரை வீடும், பொன்னாவரையைச் சேர்ந்த முருகேசன் மனைவி சசி என்பவர் கூரை வீடும் சேதமடைந்தன.

வளப்பக்குடி சாலையில் தேக்கு மரம் விழுந்ததில் குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், மின்சாரத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேக்கு மரத்தை வெட்டி எடுத்தனர். பின்னர் அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: ராணிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை!

ABOUT THE AUTHOR

...view details