தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று குணமடைந்த 6 நபர்கள் மருத்துவமனையிலிருந்து வாகனங்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஆறு பேர்! - thanjavur district news
தஞ்சை:கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆறு பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஆறு பேர்
குணமடைந்து வீடு திரும்புபவர்கள் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:நாடு திரும்ப உதவி செய்யுங்கள்- சவுதியில் தவிக்கும் தொழிலாளர்கள்