தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்தை வெட்டும்போது நேர்ந்த பரிதாபம்: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! - கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் மரத்தை வெட்டும்போது அதன் கிளையில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருங்கை மரத்தை வெட்டும்போது நேர்ந்த பரிதாபம்
முருங்கை மரத்தை வெட்டும்போது நேர்ந்த பரிதாபம்

By

Published : Jul 4, 2022, 7:29 PM IST

Updated : Jul 4, 2022, 7:35 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் சின்னதம்பி (44) என்பவர் தன் வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரத்தின் கிளை அருகே உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்து சின்னதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி - ஆந்திராவைச் சேர்ந்த பெண் கைது

Last Updated : Jul 4, 2022, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details