தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு நாள் - தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு புத்தகங்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு புத்தகங்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு புத்தகங்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை

By

Published : Sep 15, 2020, 9:07 PM IST

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் அமையப்பெற்று 40 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதனைச் சிறப்பிக்கும்விதமாக ஆன்லைன் மூலமாக கருத்தரங்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் 50 விழுக்காடு தள்ளுபடியுடன் புத்தக விற்பனையை தொடங்கிவைத்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக வந்து புத்தகங்களை வாங்க முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாகப் பார்த்து புத்தகத்திற்கான தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் எனவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டு வாசிப்புத் திறனை மேம்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details