தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய் இனத்தின் பெயர்களை கூறி 4 வயது சிறுவன் சாதனை! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: 100 நாய்கள் இனத்தின் பெயர்களை 4 வயத சிறுவன் 54 நொடிகளில் கூறி கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சிறுவன் சாதனை
சிறுவன் சாதனை

By

Published : Jun 24, 2021, 7:35 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கரிக்காடு சிவபாக்யதம்மாள் நகரைச் சேர்ந்தவர் திவ்ய தர்ஷன் (4). இவர் 100 நாய்கள் இனத்தின் பெயர்களை 54 நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார்.

நடுவர் ஹரிஷ் அங்கீகாரத்தை பதிவு செய்து, கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் திவ்ய தர்ஷனுக்கு சான்றிதழ், அப்துல் கலாம் உருவம் பதித்த கேடயத்தை வழங்கினார்.

சிறுவன் சாதனை

ஏற்கனவே, சிறுவன் 100 திருக்குறளை 4 நிமிடம் 41 விநாடிகளிலும், 193 நாடுகள், அதன்‌ தலைநகரங்களின் பெயர்களை 2 நிமிடம் 26 விநாடிகளிலும், 50 நாடுகள், அதன் தலைநகரங்களின் பெயர்களை 31 நொடிகளிலும், மகாபாரதத்தின் 60 கௌரவர்களின் பெயர்களை 27 நொடிகளிலும், 118 கனிமங்களின் பெயர்களை 37 நொடிகளிலும் என 10 உலக சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஸ்டரை பின்னுக்குத் தள்ளி 'பீஸ்ட்' படைத்த புதிய சாதனை

ABOUT THE AUTHOR

...view details