தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகக்கழகத்தின் 35ஆவது ஆண்டு விழா நேற்று (மார்ச் 11) மாலை நடைபெற்றது. இந்த விழா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை, இயக்குநர் ஆர். லலிதா ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய ஆர். லலிதா, சிறப்பு வாய்ந்த இந்த பல்கலைக் கழகத்திலேயே நான் படித்திருந்தேன். நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதையும் படிங்க:ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
நாங்கள் பயின்ற காலத்தில் எப்படி சுற்றுச்சூழல் இருந்ததோ அதே சுற்றுச்சூழல் பல்வேறு வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவர்களாகிய நீங்கள் எந்தத் துறையில் சிறப்பாக செயல்படுகிறீர்களோ அந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். இந்த காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும், கவனமுடனும் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களை நன்மைகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையை முடிவு செய்தார். அதன் பின்னர் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை உரையாற்றும்போது, நமது பல்கலைக் கழகத்தில் பயின்று இன்று ஐஏஎஸ்-ஆக உயர்ந்து வந்திருக்கும் லலிதாவை பாராட்டுகிறேன்.