தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு - etv bharat

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு
ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு

By

Published : Aug 13, 2021, 5:34 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகிய இருவரிடம் கடந்த திங்கள் கிழமை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணை இன்று (ஆக.13) முடிவடைந்தது. இந்நிலையில் அவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னதாக இருவருக்கும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு

இதுகுறித்து தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் பிரவேஷ் குமார் கூறுகையில், "போலீஸ் கஸ்டடி இன்றுடன் முடிவடைவதால், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். ரூ.30 கோடி மோசடி தொடர்பாக 35 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்கள் மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்கள் மீது மோசடிப் புகார்கள் வருகின்றன. தேவைப்பட்டால் மீண்டும் அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க:ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி: காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பதில்

ABOUT THE AUTHOR

...view details