தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அகரமாங்குடியில் சந்தோஷ் குமார் என்பவர் வீட்டில் ஏராளமான கேன்களில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த 3000 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் எரிசாராயத்தை மறைத்து வைத்திருந்த சந்தோஷ்குமார் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.