தஞ்சை மாவட்டத்தில், கரோனா தொற்று பாதித்த 57 நபர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களும், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இருவருக்கும் மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா, பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 41 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் 16 நபர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குணமடைந்து வீடு திரும்பிய அவர்களுக்கு, அதே பகுதியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள் தினமும் கண்காணித்து வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மேலும் சென்னையிலிருந்து அனுமதி பெற்று வந்த 43 பேர் மோட்டார் இருசக்கர வாகனத்திலும், காரிலும் வந்தனர். அப்போது விளாங்குடி சோதனைச் சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் 43 பேரையும் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.