தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் களைகட்டிய நாணய கண்காட்சி!

தஞ்சை: கும்பகோணத்தில் நாணய கண்காட்சி இன்று முதல் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் பழங்காலத்து நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவை இடம்பெற்று, காண்போர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

exhibition

By

Published : Aug 9, 2019, 5:58 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொல்லியல் நாணயவியல் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடக்கவுள்ள தேசிய அளவிலான 7-ஆவது நாணய கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சி நாகேஸ்வரன் தெற்கு வீதி, எம்எஸ்ஆர் மஹாலில் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் இரவு 9 மணி வரை நடக்கயிருக்கிறது.

இதில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் உயிர் வாழ்ந்த திமிங்கலத்தின் பல், மம்மூத் யானையின் கடைவாய் பல்லின் படிமங்கள், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, சோழர் கால பெரிய செங்கல், 3 துவாரங்களில் மூன்று சாவிகளைக் கொண்டு 6 முறை திறந்தால் மட்டுமே திறக்கும் அதிசயப் பூட்டு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும், குழந்தைகளுக்கான பழங்கால விளையாட்டுப் பொருட்கள், பழமையான எடை கற்களின் அணிவகுப்புகள், 1940-ஆம் ஆண்டுகளில் படித்த மாணவர்களின் பாடப் புத்தகங்கள், ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற பழைய பணத்தாள்களின் கூழ், 10 ரூபாய் நோட்டில் ஒரே எண் கொண்ட 80 எண்ணிக்கை நோட்டுக்கள், மரத்தை குடைந்து செய்யப்பட்ட பானை, மரத்தால் செய்யப்பட்ட தானியங்கள் அளக்கும் படிகள், சேர சோழ பாண்டியர், பல்லவர், பிரிட்டிஷ் கால நாணயங்கள், நமது முன்னோர்கள் பயன்படுத்திய பலவிதமான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

நாணய கண்காட்சி

இப்பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். தொல்லியல் நாணயவியல் கழக நிறுவனர் முத்தையா மற்றும் அவரது குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details