தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி அகலாய்விற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பாண்டியராஜன்!

தஞ்சாவூர்: கீழடி அகலாய்விற்கு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

pandiarajan

By

Published : Aug 31, 2019, 3:42 AM IST

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் யோகா நூல் வெளியீடு விழா, நல்லாசிரியர் நன்மாணக்கர் பாராட்டு விழா ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், "கீழடியில் மொத்தம் 142 ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. கீழடியில் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் ராஜராஜசோழன் மணி மண்டபம் கட்டுவதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கீழடி அகலாய்விற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: பாண்டியராஜன்!

ABOUT THE AUTHOR

...view details