தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் கரோனா தொற்றால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு! - தஞ்சாவூர் கரோனா இறப்புகள்

தஞ்சையில் கரோனா தொற்றால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மேலும் 180 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Thanjavur medical college
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

By

Published : Sep 29, 2020, 3:11 PM IST

தஞ்சாவூர்:தஞ்சையில் கரோனா தொற்றால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மேலும் 180 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் செப்.28ஆம் தேதி புதிதாக 180 நபர்கள் கரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, வல்லம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் சிறப்பு கரோனா சிகிச்சை மையங்களில், ஆயிரத்து 169 சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில், இதுவரை 10 ஆயிரத்து 733 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 564 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று (செப்.28) ஒரே நாளில் 230 நபர்கள் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல், மாவட்டத்தில் இதுவரை 172 நபர்கள் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும்(செப்.28) மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details