இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மருததுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாத சடலங்களை அடக்கம் செய்வது என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சை மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் இருக்கும் 20 உடல்கள்! - Dr Marudadurai is the Chief Minister of Tanjore Medical College
தஞ்சாவூர்: கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் 20 உடல்கள் கிடக்கின்றன. இதனை அடக்கம் செய்ய மருத்துவக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 20 சடலங்கள் உள்ளன. இதில் 13 ஆண் உடல்களும், ஏழு பெண் உடல்களும் அடங்கும்.
இந்தச் செய்தி கிடைத்த ஏழு நாள்களுக்குள், இச்சடலங்கள் மீது எவரும் உரிமைக் கோராதபட்சத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூலம் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் அடக்கம் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!