தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன், காய்கறி பெட்டிகளில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்! - thanjavur district news

தஞ்சையில், மீன், காய்கறிப் பெட்டிகளில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

162-liger-bottles-seized-in-thanjavur
மீன், காய்கறி பெட்டிகளில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Jul 4, 2021, 7:14 AM IST

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் கடலோர பாதுகாப்பு குழும சோதனைச்சாவடியில் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கட்டுமாவடியிலிருந்து திருவாரூர் மாவட்டம் பெத்தவேளாண்கோட்டகத்தைச் சேர்ந்த இளையராஜா, நாகை மாவட்டம் கற்பகநாதர்குளம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆகிய இருவரும் தனித்தனியே இரண்டு இருசக்கர வாகனத்தில் காய்கறி, மீன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர்.

அவர்களை மடக்கி சோதனை செய்ததில், காய்கறி, மீன் பெட்டிக்குள் 162 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டையிலிருந்து, மதுபாட்டில்களை வாங்கி திருவாரூர், நாகை பகுதியில் விற்பனைக்கு எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சாலையில் தவறி விழுந்த மதுபாட்டில்கள்

ABOUT THE AUTHOR

...view details