தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: தஞ்சசையில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்! - கரோணாவில் இருந்து 14 பேர் குணமடைந்தனர்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா பாதிப்பு: தஞ்சசையில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!
14 people recover from corona

By

Published : Jul 28, 2020, 10:03 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா முழுவதும் இதுவரை சுமார் 260க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக பட்டுக்கோட்டையில் மட்டும் இன்றுவரை 123 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் புது ரோட்டில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 14 பேர் இன்று தொற்றிலிருந்து குணமடைந்தனர். இவர்களை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், தாசில்தார் தரணிகா, நகராட்சி அலுவலர்கள் பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் வீட்டுக்குச் சென்ற 14 பேரையும் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details