தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 132 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் இன்று 132 பேருக்கு கரோனா உறுதி! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், மாவட்டத்தில் இன்று (செப்.01) ஒரே நாளில் 132 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thanjavur district corona details
இதுவரை 6 ஆயிரத்து 737 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 132 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மட்டும் 858 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 126 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.