தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: விடுப்பு எடுத்த மாணவர்கள்! - தஞ்சையில் பொதுதேர்வுக்கு விடுப்பு எடுத்த மாணவர்கள்

தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில் தஞ்சையில் 1299 மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.

தேர்வு நடைபெறுவ்தை கண்காணித்த ஆசிரியர்கள்
தேர்வு நடைபெறுவ்தை கண்காணித்த ஆசிரியர்கள்

By

Published : Mar 4, 2020, 10:59 AM IST

தமிழ்நாடு முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் 12ஆயிரத்து 406 மாணவர்கள், 15ஆயிரத்து 564 மாணவிகள் என மொத்தம் 27ஆயிரத்து 970 பள்ளி மாணாக்கர்கள் தமிழ் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

அனைத்து தேர்வு மையங்களிலும், முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 1723 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். 108 மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர் இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதிவந்த நிலையில் தஞ்சையில் மட்டும் 1299 மாணவர்கள் தமிழ் தேர்வுக்கு விடுப்புக்கு எடுத்துள்ளனர்.

தேர்வு நடைபெறுவ்தை கண்காணித்த ஆசிரியர்கள்

மேலும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 212 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை: தமிழ்நாடு தேர்வுத்துறை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details